விராட் கோலி ஆன்லைன் பணப் பரிமாற்ற பிராண்டின் விளம்பர தூதர், Remit2India

Remit2India பணம் செலுத்துபவர்களை ஈர்ப்பதற்காக விராட்டின் கவர்ச்சி தோற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ள உள்ளது

மும்பை, இந்தியா-வியாழன் 14 ஜூன் 2018 [ AETOS Wire ]

விராட் கோலி ஆன்லைன் பணப் பரிமாற்ற பிராண்டின் விளம்பர தூதர், Remit2India (Press Video: AETOSWire)

இந்திய புலம்பெயர் மக்கள்மீது கவனத்தைக் கொண்ட உலகளாவிய ஆன்லைன் தொகை செலுத்தும் போர்ட்டலாகிய Remit2India, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மூன்று ஆண்டுகளுக்கு தன்னுடைய உலகளாவிய விளம்பர தூதராக நியமித்துள்ளதை இன்று அறிவித்தது. 

விராட், Remit2India பிராண்டின் புதுமையான சந்தைப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ முனைப்புகளில் தான் ஒரு பங்காக விளங்கி அதற்கு ஆதரவு அளிப்பார்.  Remit2India என்பது, ஐக்கிய அரபு எமிரேட்டுகளை இருப்பிடமாகக் கொண்ட இந்திய தொழிலதிபர் டாக்டர்.பி.ஆர். ஷெட்டியின் சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்ட ஹோல்டிங் கம்பெனியாகிய, Finablr நிதி சேவைகள் பிராண்டுகளில் ஒன்றாகும்.

Finablr என்ற குடையின்கீழ் இயங்கும் செலுத்துகை பிராண்ட் நெட்வொர்க் ஆனது (Remit2India, UAE Exchange, மற்றும் எக்ஸ்பிரஸ் மணி உட்பட) 12%-க்கும் மேற்பட்ட இந்தியாவிற்கு செலுத்தப்படும் குறிப்பிடத்தக்க சந்தைப் பங்கினைக் கொண்டுள்ளது.   2017ல், உலக வங்கியின் இடப்பெயர்வு மற்றும் அபிவிருத்தி சுருக்க அறிக்கையின்படி இந்தியா US$69 பில்லியனைப் பெற்றுள்ளது.

"உலக அளவில் அரை மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட Remit2India என்ற புகழ் பெற்ற பிராண்டின் முகமாக விளங்குவது ஒரு கௌரவமான விஷயமாகும். இந்திய புலம்பெயர் மக்களிடையே, இந்தியரின் பெருமிதம் மற்றும் சாதனை உணர்வை, தேசப்பற்றை மற்றும் இந்தியராக இருப்பதில் பெருமையும் பிரதிபலிக்கும். ஒரு பிராண்டாக Remit2Indiaவின் பெருகிவரும் ஈர்ப்பை வலுப்படுத்துவதை நான் பெரிதும் எதிர்நோக்குகிறேன்" என்று  விராட் கோலி தெரிவித்தார். 

Remit2Indiaவின் வாடிக்கையாளர் அடிச்சுவடுகள் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் பெருமளவு காணப்படுகின்றன.  அதே சமயம், புதிய புலம்பெயர் சந்தைகளை அடைவதற்கான முயற்சிகள், இந்திய கிரிக்கெட் கேப்டனின் பரவலான கவர்ச்சியை உந்தச் செய்வதால் உத்வேகம் பெறும்.

"Remit2India போன்ற ஒரு இளமை ததும்பும் பிராண்டுக்கு, சிறந்த கிரிக்கெட் வெற்றி வீரர் என்ற அடையாளத்துடன் திகழும் விராட் மிகவும் பொருத்தமான ஒரு நபர் ஆவார். அவர் இந்தியாவின் வெற்றி உற்சாகத்தைப் பிரதிபலிக்கிறார். அது மில்லியன் கணக்கான இந்தியர்களை தங்களது தகுதியை மெய்ப்பிப்பதற்காக தொலைதூர கடற்கரைகளுக்கு அனுப்புகிறது.  அது அவர்களின் செலுத்துகை வாயிலாக சொந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்றுகிறது. Remit2Indiaவும் விராட்டும் மேன்மையின் பெருமையைப் பகிர்ந்து கொள்கின்றனர். அவரை இந்த பிராண்டின் உலகளாவிய அடையாளமாக பெற்றிருப்பது ஒரு பாக்கியம்" என்று Finablr-ன் செயல் இயக்குநர் பிரமோத் மங்காட் தெரிவித்தார்.

Remit2India பற்றி

Remit2India என்பது இந்திய ஆன்லைன் செலுத்துகை அமைப்புகளில் ஒரு முன்னோடியாகும். இது எளிமையான, பாதுகாப்பான மற்றும் வசதியான ஆன்லைன் பணப்பரிமாற்ற தீர்வுகளை வழங்குகிறது. Remit2India-வின் பணப்பரிமாற்ற சேவையானது, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திலிருந்து பலவித அனுப்புகை விருப்பத் தேர்வுகளுடன் பணத்தை இந்தியாவிற்கு அனுப்புவதற்கு மிகவும் பாதுகாப்பானது ஆகும்.  ஒட்டு மொத்த நடைமுறையுமே ரொக்கமில்லாதது ஆகும்.  அது சென்று அடையும் வரை அதன் ஒவ்வொரு பரிமாற்றத்தையும் கண்காணிக்க முடியும்.


Contacts

தொடர்புகள்:

ஐக்கிய அரபு எமிரேட்டுகள் பரிமாற்றம்

லாசென் அட்டெர்டா

மேலாளர் ஊடகத் தொடர்புகள், +97123073088

Aterta.lahcen@uaeexchange.com    





Permalink : https://www.aetoswire.com/ta/news/விராட்-கோலி-ஆன்லைன்-பணப்-பரிமாற்ற-பிராண்டின்-விளம்பர-தூதர்-remit2india/ta


Multimedia

Photos

Indian Cricket Captain Virat Kohli with Finablr Executive Director Binay Shetty (right) and Finablr Executive Director Promoth Manghat (left) (Photo: AETOSWire)

Indian Cricket Captain Virat Kohli with Finablr Executive Director Binay Shetty (right) and Finablr Executive Director Promoth Manghat (left) (Photo: AETOSWire)

Permalink : https://www.aetoswire.com/ta/news/விராட்-கோலி-ஆன்லைன்-பணப்-பரிமாற்ற-பிராண்டின்-விளம்பர-தூதர்-remit2india/ta